Saturday 11 January 2014

இரண்டாம் வீடு - பலன்கள் Predictions based on Second House

இரண்டாம் வீடு - பலன்கள் Predictions based on Second House

இரண்டாம் வீடு - பலன்கள் Predictions based on Second House

மூன்றாம் வீடு பலன்கள் Astrology predictions based on 3rd house

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?what is meant by Sevvaithosam?

வாக்கியமா திருகணிதமா ? ஏன் ஜோதிட பலன்களில் மாற்றம்?

நான்காம் வீட்டின் பலன்கள்

ஐந்தாம் வீடும் அதன் முக்கியத்துவமும்

6,8,12 வது வீடுகள் நல்லவையா அல்லது கெட்டவையா ?

மாலை 6 மணிக்கு மேல் சொல்லும் ஜோதிடம் பலிக்குமா ?

சென்ற வாரம் ஒருவர் ஜோதிடம் பார்க்க வருவதற்கு என்னை தொடர்புகொண்டார். நன் அவரை மாலை 6.30 மேல் வரசொன்னேன் அதற்கு அவர் கூறியது அந்தி சாய்ந்து ஜோதிடம் கூறினால் பலிக்காதுன்னு சொல்லுவாங்களே ? .

அதற்கு என் பதில் 
நன் கூறும் ஜோதிடம் அறிவியல் ரீதியானது அது எதிர் கல பலன் ,அருள் வாக்கு எதுவும் இல்லை பலிபதற்கு. அந்த காலத்தில் வேலை நேரம் 6am - 6pm தான் , மேலும் விளக்கின் ஒளியில் என்ன கிரகத்தை பார்த்து என்ன சொல்ல என்று இது போல கூறி இருப்பார்கள்.

தற்காலத்தில் இரவு 12 மணிக்கும் கூட நன் தெளிவாக இருந்தால் செரியன பலனை கூற முடியும்.

பாதகாதிபதி - ஸ்திர லக்கினம்

9 ம் வீட்டு அதிபதி ஸ்திர ராசி(ரிஷப,சிம்ம,விருச்சிக,கும்ப ) லக்கினத்தில் பிறந்த சாதகருக்கு பாதகாதிபதி என்பது புலிப்பாணி பாடலில் மூலம் தெளிவாக விளங்குகிறது. பாதகாதிபதி கேந்திரத்தில்(1,4,7,10) நின்றால், கெடு பலனும். திரிகோண ஸ்தானங்களில்(5,9) நின்றால், நற்பலன் என்று தெளிவாகிறது.
மேலும் அஷ்டமாதிபதிக்கும் (8ம் வீட்டு அதிபதி) இதே விதிதான்.

ரிஷப லக்கினம்
சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு
சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.
அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற
அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு
தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்
தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு
குள்ளப்பா குருமதியுங் கோணமேற
கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே

சிம்ம லக்கினம்
பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.

விருச்சிக லக்கினம்
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே

கும்ப லக்கினம்
பாடினேன் இன்னமொரு புதுமைகேளு
பாங்கான கும்பத்தி லுதித்த சேய்க்கு
ஆடினேன் அசுரர்குரு கோணமேற
அப்பனே உப்பரிகை மேடையுண்டு
தேடினேன் திரவியமும் சென்னல் பூமி
திடமாகச் சேருமடா செல்வமுள்ளோன்.
கூடினேன் கேந்திரமும் நட்புமே
கொற்றவனே துர்ப் பலனைக் கூறுவாயே

பாதகாதிபதி - சர லக்கினம்

11 ம் வீட்டு அதிபதி சர ராசி(மேஷம்,கடக,துலாம்,மகர) லக்கினத்தில் பிறந்த சாதகருக்கு பாதகாதிபதி என்பது புலிப்பாணி பாடலில் மூலம் தெளிவாக விளங்குகிறது. பாதகாதிபதி கேந்திரத்தில்(1,4,7,10) நின்றால், கெடு பலனும். திரிகோண ஸ்தானங்களில்(5,9) நின்றால், நற்பலன் என்று தெளிவாகிறது.

மேஷ லக்கினம்
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே

கடக லக்கினம்
கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே

துலாம் லக்கினம்
கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே

மகர லக்கினம்
அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே

பாதகாதிபதி மற்றும் கேந்திராதிபதி தோஷம்.

உபய லக்கின ஜாதகருக்கு (மிதுன, கன்னி , தனுசு, மீன லக்கினம் ) 7ம் வீட்டு அதிபதி (களத்திர காரகன்) பாதகாதிபதி ஆகிறார். எனவே 7ம் வீட்டு அதிபதி பலம் பெறுவது மிக தவறு. அதாவது ஆட்சியோ உச்சமோ பெற்றால் அவரது திருமண வாழக்கை தோல்வியில் முடியும்.
மேலும் 1,4,7,10 க்கு அதிபதிகள் 1,4,7,10 இடங்களில் இருந்தால் அது கேந்திரதிபதி தோஷம் எனப்படும்.

Friday 18 October 2013

Lunar Eclipse 2013

Astrology is nothing but science
Lunar eclipse tonight (19/10/2013 early morning IST)- Astrology view
lunar eclipse start @ 19/10 03:20:28 and ends @ 19/10 07:19:49 Maximum of Lunar Eclipse - 05:20:17. In Hindu mythology it is depicted like Serpent is swallowing the Moon called lunar eclipse. In astrology it is Rahu(Serpent head) ,Kethu (Serpent tail)which is considered as Snake. Tonight Moon and Sun will be in the straight line and the elliptic (Rahu and Kethu) intersect on the same point which is nothing but the lunar eclipse

This time is not good for new born
Sun represent Physical Body / Father
Moon represents Mind / Mother
Since it is under the control of Rahu/Kethu these factor will be impacted.

Saturday 28 September 2013

Saturn(Shaneeswaran) and factors

Saturn meant for delay, its also called as Aayulkaragan, denotes the longevity - ie it delays the death of the native if its well placed in the horoscope.
As per the karma , Saturn shows its power in its period both good things and bad things. Eeswaran title is given only to Shani among the planets. Saturn aspects 3rd ,7th and 10th houses from its position. According to the karaga those factors will be delayed.
Native would get the experience and understand the reality in the world during the Shani rulling period

Venus(Sukran) and factors

Venus is factor for enjoyment, wealth , vehicle , ornaments.
It denotes spouse in native horoscope.
If Venus and 7th place is well placed in the birth chart, native would get loving spouse and have happy married life
If Venus and 4th place is well placed in the birth chart, native would get luxury vehicle and have great driving skills
if the Venus and 2nd place is well placed in the birth chart, native would get jewels and ornaments.

Mercury and its factors



Position of the mercury clearly denotes the intelligence of the person. Its the factor for studies. One can be a topper in education if the mercury is well positioned in his horoscope.

Mercury is the only planet act as the malefic and benefic by its association with other planets.
It also represents agency, transaction benefits, income through interest etc.

Mars(செவ்வாய்) and its factors

In the birth chart, Mars denotes the ones braveness, his immovable assets like land, buildings. It also denotes surgery, injury and sorrows. In some factors, it also denotes the brothers.

Moon and its factors

Moon represent ones mother and his mind.
Waxing moon(வளர்பிறை) and Waning moon have different effect.
Depending on the moon position , Raasi is determined. Moon is 
exalted(uchcham) in Rishabam and debilitated(Neecham) in viruchagam.

If Sun and Moon are in the same raasi then it is New moon day, if it is exactly opposite then it is full moon day.

Sun and its factors

Sun and its factors :- 
In the birth chart - 
Sun represents natives Father, physical body , benefits from government

sun exalted(uchcham) in Aries-Mesham 

Sun debilitated(Neecham) in Libra - Thulam

Depending upon the sun position in your horoscope, the above factors will be determined.

Monday 22 July 2013

Horoscope matching for Marriage

Many of us think like star matching between bride and bridegroom is enough for doing the marriage and put some score out of 10 matchings.
To me its totally useless , only the horoscope of native will tell the truth. With the help of birth chart alone we can tell the character,behaviour,health,ability to give birth,profit,loss,family status, family members and much more ...

In case of arranged marriage. we don't know much about the bride/bridegroom, So we can use the birth chart to understand those.

But whatever you do, who will become your spouse is predetermined and you should be benefited or suffered based on your fate. Astrology is just a measure to understand how much it will be 

When will a person get married ?

A person get married when some of the below circumstances occurred.

1)When owner of the 7th house Dasa /Bhudi is in running period.
2)When the planet in the 7th house Dasa /Bhudi is in running period
3) When Jupiter comes to 7th or any favorable position from Moon sign
4)When Venus Dhasa or bhudi is in running period
5) When Venus come in the favorable place from moon sign and fall under the favorable degree from Jupiter.

Birth chart & Marriage.

When check for the bride / bridegroom horoscope. Many of them think like, if lagnam, 7th and 8th houses are empty then it is good birth chart, which is not correct. You should check how the owner of the houses present in the birth chart.
Strength of the Venus and Jupiter are more important.

So if you are not clear, better check with good astrologer for those details.

Saturday 6 July 2013

My today experience

One guy came to my home(referred by his colleague who is the friend of my friend) to get the prediction for his horoscope.
I am happy that whatever I told about his past is perfect. And he accepted about my prediction on current happenings.
He is unmarried,One astrologer told him that there wont be any successor (heir) for him.

Please note , it is not possible to tell about it w/o seeing spouse horoscope.
It is important to comment about the children only after seeing both the horoscopes.
Unless Jupiter is present alone in the 5th house which is owned by mercury. Any person can have children if the spouse 5th place is good.

Though his 5th house is weak. I couldn't see any such case of not having heir in his birth chart . So I told him to be more cautious and do proper horoscope matching before marriage.

Mole(மச்சம்) and Astrology

As per science, Mole is nothing but dead cells formed together. Scientifically called Nevus.
But why it is formed in the particular place in our body. Can any body answer this question? Astrology can answer. You c...See more

Astrology & Sleep !!!

It is possible to tell how one sleep using the horoscope.
If Rahu alone present in the 12th house then he will go to bed only after midnight may be around 1 am.
If Guru alone present in the 12th house then his sleep will be disturbed lot , he cannot go to deep sleep easily
If Guru look at the 12th house then he can get it to sleep easily.
even can have sleep in short travel.

What is Astrology ?

Astrology says planets and starts can influence human body and soul. human mind is influenced by those cosmic bodies and determine your life path. 

Is it really true ? does it looks it weird to accept ?
in Astrology , Sun represent Father / body and Moon represent Mother / mind

Scientifically , no life can exist in the earth w/o Sun.
Why the mentally retorted people go crazy on no moon day and new moon day ? but normal people spent their day normally without even knowing that.

Why Tamil word Mathi represent both mind and Moon.

Debate can continue ....
if you don't believe in astrology given your DOB , precise time of birth and place of birth. you no need to mention the name and gender. you will start believe in astrology after my predictions 

Who would have bald head in young age ?

Whoever have Jupiter in the lagnam (first house) would started loosing the hair in the forehead even at the younger age.This will happen for sure for dhanus/Meenam/Kataka lagnams.

Any hair treatment could only give temporary relief but wont solve the issue.

Can we predict the life span of a person using the birth horoscope?

The answer is Yes , Using some basic rules , we can categories the life span into the below 3 ranges 
short span < 30 years
Medium span 30 - 60 years
long span >60 years

But during early ages, astrologers even give the exact date and there are lot of evidences for such events.

nowadays at least we could give some month period based on the current dasa , budhi and antara.

We need to first determine the category of life span and look for period when the 2,7,12 th house dasa/ budhi /antara ruling the person.

Tuesday 18 June 2013

Western astrology Vs Vedic astrology

Vedic astrology is based on moon sign and deals with only 9 planets. here sun(biggest star of solar system) ,moon (earth own satillite), rahu , kethu ( eliptic path where sun and moon path intersect) are considered as planets. The definition of planet was given wrong in vedic astrology , but the distance between them and time each planet takes for one revolution in the solar system are calculated nearest to the accurate. They are written thousand of years back before the invention of telescopes

Western astrology is based on the sun sign and adding the recently invented planets like uranus , neptune , pluto for the predictions.

But still our vedic astrology rocks by the way it is written, It even attracts many western people. I really surprised with many videos published by the astorlogers from UK an USA where they follow our vedic astrology for the prediction.

வயதில் மூத்த பெண்ணை மணம் புரிதல்.

சனி ஏழாம் இடத்தில் இருந்தாலோ, சனி ஏழாம் இடத்தைப் பார்த்தாலோ , 7க்கு உரியவர் சனியுடன் சேர்ந்தாலும்தன்னை விட வயதில் மூத்த பெண் அல்லது பார்ப்பதற்கு மூத்த தோற்றம் கொண்ட பெண்ணை மணமுடிப்பார்.

வெளிநாடு செல்ல கூடிய ஜாதகம்

திரைகடல் ஓடி திரவியம் தேடு !!!

லகனதுடன் ராகு/ சந்திரன்/ கேது தொடர்பு இருந்தால் கடல் தாண்டும் பாக்கியம் அமைகிறது.

இந்த தொடர்பு பத்தாம் இடத்தில் அமைந்தால் தொழில் ரீதியாக வெளிநாடு செல்ல முடியும்.

Sunday 9 June 2013

ரண ருண ரோகஸ்தானம் ஆறாம் வீடு

ஆறாம் வீட்டில் சென்று அமரும் கிரகங்களுக்கான பலன்கள்!

1 சூரியன்-அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும். 

2. சந்திரன்-குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோயுற்ற சேயாக இருந்திருப்பான். அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை/பார்வை பெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். மாறாத எதிரிகள் இருப்பார்கள்.

3. செவ்வாய் -விபத்துக்கள், விரையங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் ஏற்படும். செவ்வாயுடன் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகன் அசாதரணமான மரணத்தைச் சந்திக்க நேரிடும்.

4. புதன்- எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர். கல்வியில் தடைகள் ஏற்படும். புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாகும். சோம்பல் உண்டாகும். பேச்சில் கடுமை உண்டாகும். எதிரிகளுக்குப் பயப்பட மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்

5. குரு- சுறுசுறுப்பு இல்லாமை ஏற்படும். மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை களைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். அதே குருவிற்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் உடல் உபாதைகள் உண்டாகும்.

6. சுக்கிரன்- விரோதிகளே இருக்கமாட்டார்கள். பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். பெண் ஜாதகராக இருந்தால் ஆண்களால் ஏமாற்றப்படுவார்கள். அதே சுக்கிரனுக்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால், ஜாதகர் அதீதமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பார். அதனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகு பவராகவும் இருப்பார்.

7. சனி- வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர். அங்கிருக்கும் சனி, பார்வை அல்லது சேர்க்கையால் கெட்டிருந்தால், நோய்கள் உண்டாகும், நண்பர்களால் சீரழிவு உண்டாகும். சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அல்லது சனி செவ்வாயின் பார்வை பெற்றால், அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட நேரிடும். ராகு சேர்ந்தால் அல்லது பார்த்தால் (அதாவது ஆறில் இருக்கும் சனியை) ஜாதகருக்குக் ஹிஸ்டீரியா நோய் உண்டாகும். சனி நல்ல நிலமையில் அங்கிருந்தால் ஜாதகர் பெரிய காண்ட்ராக்டராகப் பணி செய்வார். பெரும் பொருள் ஈட்டுவார்.

8. ராகு- நீண்ட ஆயுள் உடையவர்.ஆரோக்கியமானவர். ஆனால் அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். ராகு கெட்டிருந்தால் புதிரான நோய்கள் உண்டாகும். இங்கே ராகு சந்திரனுடன் இருந்தால் அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் மனப் பிறழ்வு உண்டாகும்.(mental retartation) இதே இடத்தில் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பார்.

9. கேது- கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். புதன், சனி போன்ற நட்புக்கிரகங்களின் கூட்டணி அமைந்தால், ஜாதகன், மந்திர, தந்திர ஜால வேலைகளில் கெட்டிக்காரராக இருப்பார்.

யாருக்கு காது செவிடு / காது சம்மந்தமான நோய்

ஜோதிடமும் நோய்களும் மூன்றாம் வீடு

லக்னத்துக்கு மூன்றாம் வீட்டில் ஆறாம் வீட்டு அதிபதி அமர்ந்து , மூன்றாம் வீட்டுக்கு அதிபதி, லக்னத்துக்கு ஆறு, எட்டு பன்னிரண்டு, போன்ற இடங்களில் இருப்பது அல்லது நீச்சம் அடைந்து இருந்தால் காது சம்மந்தமான நோய் அல்லது காது செவிடு ஆகலாம்

Wednesday 5 June 2013

ஜோதிடமும் நோய்களும் - இரண்டாம் வீடு

யார் கண்ணாடி அணிவார்கள் ?
சூரியன் மற்றும் சந்திரன் இரண்டாம் வீட்டில் இருந்தாலோ.
இரண்டாம் வீட்டுக்கு உரியவன் 6,8,12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலோ. கண்பார்வை பதிக்கப்படும்

யாருக்கு திக்கி திக்கி பேசுவர் ?
இரண்டாம் வீடு கடகம் விருச்சகம் மீனம் போன்ற ராசியாக அமைந்து அதில் புதன் இருந்து சனி பார்த்தல் அவருக்கு திக்கு வாய் அல்லது ஊமையாக கூடும்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் அல்லது கேதுவோ இருப்பின் அவர் பேச்சு சற்று கடினமாக இருக்கும் அதாவது மற்றவர் மனதை புண்படுத்துவது போல் இருக்கும்.

Tuesday 4 June 2013

ஜோதிடமும் நோய்களும் - முதல் வீடு

லக்கணம் என்னும் முதல் வீட்டில் செவ்வாய் இருப்பின் அவருக்கு தலையில் உபாதை ஏற்படும். தலையில் காயம் பட்டு மாறாத வடு ஏற்படும்.

லகணமும் உடல் அமைப்பும்
குரு இருந்தால் தலையில் வழுக்கை ஏற்படலாம்.
சூரியன் இருந்தால் நல்ல உடல் வாகு இருக்கும்.
சுக்ரன் இருந்தால் கவர்ச்சியான உடல் அமைப்பு இருக்கும்.
சனி இருந்தால் குறுகிய மார்பு இருக்கும்.

Sunday 2 June 2013

யாருக்கு இரண்டம் திருமணம் ?

அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு.

குரு தனித்து எந்த இடத்தில் அமர்தாலும் அந்த இடம் பால் படும்.

உதாரணமாக மிதுண லக்கணமாக இருந்து குரு ஏழாம் இடத்தில் அதாவது தனுசு ராசியில் தனித்து அமர்ந்தால்  அவருக்கு கண்டிப்பாக இரண்டம் திருமணம் நடக்கும்.

Saturday 1 June 2013

செவ்வாய் தோஷம

லக்னத்திற்கு 2,4,7,8,12 -இல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம உண்டு எனபது பொது விதி....

ஆண்களுக்கு 2,7,8 -லும் பெண்களுக்கு 4,8,12 லும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம எனலாம்.

ஆனால், சில விதிகள் இதில் உள்ளன, சில கிரகங்களின் பார்வை இறந்தால் செவ்வாய் தோஷம நிவர்த்தி ஆகும். அப்படி பார்த்தல் நூற்றில் ஐந்து பேருக்கு தான் தோஷம இருக்கும்.

விதிகள்:

மிதுனம் கன்னி இரண்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், ரிஷபம் துலாம் பன்னிரெண்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், மேஷம விருச்சிகம் நான்காம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், மகரம் கடகம் எல்லாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், தனுசு, மீனம் எட்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், தோஷம் கிடையாது.

செவ்வாய் சிம்மம், மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம் இவைகளில் இருந்தால் தோஷம கிடையாது.

செவ்வாய் இருக்கும் ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், புதன், சந்திரன், சுக்ரன், குரு இவர்களோடு கூடினாலும் அல்லது பார்வை இருந்தாலும் தோஷம கிடையாது.

கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது...

செவ்வாய் தோஷம் கண்டு பயப்பட வேண்டாம்....

Wednesday 29 May 2013

என்று குரு பெயர்ச்சி ? ஏன் இந்த முரண்பாடு ?

ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். 

திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. 
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படுவது திருக்கணித பஞ்சாங்கமாகும்.

வாக்கிய பஞ்சாக படி குரு பகவான் வைகாசி மாதம் 14-ம தேதி (28-05-2013) செவ்வாய்க்கிழமை 38.15 நாழிகை அளவில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

திருக்கணித முறைப்படி குரு பகவான் வைகாசி மாதம் 17-ம தேதி (31-05-2013) வெள்ளிக்கிழமை 2.41 (06.49 AM) நாழிகை அளவில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

எது எப்படி அனாலும் திறமையான ஜோதிடர்கள் கோணங்களின் அடிபடையில் பலன் சொல்ல முடியும்.

Tuesday 28 May 2013

யாருக்கு காதல் திருமணம் ?

7ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் அவர் திருமணம் காதல் திருமணமாக இருக்கும். அந்த ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.

Monday 27 May 2013

யாருக்கு குழந்தை பாக்கியமே இல்லை

குரு தனித்து புதன் வீட்டில் அமர்ந்தாள் அதுவும் பஞ்சமா ஸ்தானமாக இருந்தால், குழந்தை பாக்கியமே இல்லை என உறுதியாக கூறுகிறது ஜோதிடம். 

உதரணமாக ரிஷப லக்னம் அல்லது கும்ப லகனமாக இருந்து ஐந்தில் குரு தனித்து இருந்தால் அவருக்கு சந்தான ப்ராப்தம் இல்லை.

Sunday 26 May 2013

Guru peyarchi palangal 2013 - 2014 for all 12 moon signs குரு பெயர்ச்சி பலன் 2013 - 2014

நடப்பு விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள் (30.5.2013) சுப கிரகங்களில் முக்கியமானவரான தேவகுரு, ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார். 

இந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமைந்து. அனைவரும் பயன் பெற குரு தக்ஷின மூர்த்தியை வழிபடுவோம்.

ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

குரு நற்பலன் தரும் பாடல்
பெரு பதினொன்று ஐந்து ஏழு
பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ குரு
வரின் செல்வம் சீர் குதிரை
வெண்குடை தீவர்த்தி
தருமம் தானமும் உண்டு
தாய் தந்தை துணையுமுண்டு
அருமையும் பெருமையும் உண்டாம்
அரசர் பரிசும் பாராட்டும் உண்டாம்.
குரு துர்ப்பலனை தரும் பாடல்
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை
சிறை வைத்ததும்
தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும்
ஈசனார் ஒரு பத்திலே
தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்
சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தலை பூண்டதும்
வன்மை யற்றிட ராவணன் முடி
பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்
மன்னு மா குரு சாரி
மாமனை வாழ்விலா துறமென்பவே.


குரு பெயர்ச்சி பலன்கள் ராசியை வைத்து சொல்லுவது மிக பொதுவானது . அவர் அவர் சுய ஜாதககதில் குருவின் பலன் கொண்டும். தற்சமயம் அவருக்கு நடக்கும் தசா புத்தி கொண்டும்தான் கூற வேண்டும்.
பலன் ஜூன் 2013 to மே 2014.

மேஷ ராசி (குரு மூன்றில்)
1.திருமணம் கை கூடி வரும் நேரம்.
2.
கூட்டு தொழில் வெற்றிபெறும். 
3.
தந்தையின் உடல் நலம் சீராகும்.
4.
பண வரவு அதிகரிக்கும்.
5.
தைரியம் மேலோங்கும்.
6.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
7.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்.
8.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்.

ரிஷப ராசி (குரு இரண்டில் )
1.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
2.
வாக்கு சிறக்கும்.
3.
புதிய எதிரிகள் உருவாகலாம்.
4.
பழைய கடன் திருப்புவதும் புதிய கடன் பெறுவதுமாக இருக்கும்.
5.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
6.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.
7.
உத்தியோகம் உயரும்.

மிதுன ராசி (குரு ராசியில்)
1.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு.
2.
உடல் நலம் மேம்படும்.
3.
குழந்தைகளால் மகிழ்ச்சி.
4.
திருமணம் தாமதம் ஆனவர்களுக்கு இப்பொழுது அதற்கான முயற்சிகளில் வெற்றி.
5.
தந்தையின் உடல் நலம் மேம்படும்.
6.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்

கடக ராசி( குரு பன்னிரெண்டில்)
1.
விரயங்கள் அதிகரிக்கும்.
2.
தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
3.
வீடு/வாகனம் வாங்க அல்லது விஸ்தரிக்க எற்ற தருணம். 
4.
எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும்.
5.
வீடு, வாகனம் வாங்க அல்லது சுப செலவிற்காக கடன் வாங்கலாம்.
6.
உடல் ஆரோக்கியம் சிறக்கும்

சிம்ம ராசி (குரு பதினொன்றில்)
1.
மிகவும் லாபகரமான காலம்.
2.
பண வரவு அதிகரிக்கும்.
3..
தைரியம் மேலோங்கும்.
4.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
5.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்
6.
புத்திர பாக்கியம் ஏற்படும்.
7.
குழந்தைகளால் மகிழ்ச்சி.
8.
திருமணம் கை கூடி வரும் நேரம்.
9.
கூட்டு தொழில் வெற்றிபெறும்.

கன்னி ராசி (குரு பத்தில்) 
1.
பொருளாதார நெருக்கடி.
2.
உத்யோகத்தில் இடர்பாடுகள்.
3.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
4.
வாக்கு சிறக்கும்.
5.
தாயின் அதரவு கிடைக்கும்.
6.
கடன் சுமை அதிரிக்கும்.

துலா ராசி (குரு ஒன்பதில் )
1.
பாக்கியமான காலம் இது.
2.
உடல் நலம் மேம்படும்.
3..
தைரியம் மேலோங்கும்.
4.
பயணங்களால் லாபம் 
5.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்
6.
தடை பட்ட புத்திர பாக்கியம் தற்பொழுது கிட்ட வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி (குரு எட்டில் )
1.
குரு பலம் அற்ற காலம் இது.
2.
திருமண தடை தொடரலாம்.
3..
புத்திர பாக்கியம் தடை படலாம்.
4.
குடும்பத்தில் தாயின் உதவி கிடைக்கும்.
5.
விரயங்கள் அதிகரிக்கும்.
6.
குடும்பத்தை விட்டு தனித்து இருக்க நேரிடலாம்.

தனுசு ராசி (குரு எழில் )
1.
திருமண தடை நீங்கி திருமணம் கை கூடி வரும்
2.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து ஒற்றுமை மேலோங்கும் .
3.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
4.
தைரியம் மேலோங்கும்.
5.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
6.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்.
7.
பண வரவு அதிகரிக்கும்.

மகர ராசி (குரு ஆறில் )
1.
எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும்.
2.
உடல் ஆரோக்கியம் சிறக்கும்
3.
வீடு, வாகனம் வாங்க அல்லது சுப செலவிற்காக கடன் வாங்கலாம்
4.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
5.
வாக்கு சிறக்கும்.
6.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.

கும்ப ராசி (குரு ஐந்தில்)
1.
புத்திர பாக்கியம் ஏற்படும்.
2.
குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம்.
3.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
4.
தந்தையின் உடல் நலம் சீராகும்.
5.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்.
4.
பண வரவு அதிகரிக்கும்
5.
மிகவும் லாபகரமான காலம்.

மீன ராசி (குரு நான்கில் )
1.
வீடு/வாகனம் வாங்க அல்லது விஸ்தரிக்க எற்ற தருணம். 
2.
தாயின் அதரவு கிடைக்கும்.
3.
தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
4.
சுப விரயங்கள் அதிகரிக்கும்.
5.
பழைய கடன் திருப்புவதும் புதிய கடன் பெறுவதுமாக இருக்கும்.
6.
உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
7.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.