11 ம் வீட்டு அதிபதி சர ராசி(மேஷம்,கடக,துலாம்,மகர) லக்கினத்தில் பிறந்த சாதகருக்கு பாதகாதிபதி என்பது புலிப்பாணி பாடலில் மூலம் தெளிவாக விளங்குகிறது. பாதகாதிபதி கேந்திரத்தில்(1,4,7,10) நின்றால், கெடு பலனும். திரிகோண ஸ்தானங்களில்(5,9) நின்றால், நற்பலன் என்று தெளிவாகிறது.
மேஷ லக்கினம்
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே
கடக லக்கினம்
கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே
துலாம் லக்கினம்
கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே
மகர லக்கினம்
அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே
மேஷ லக்கினம்
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே
கடக லக்கினம்
கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே
துலாம் லக்கினம்
கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே
மகர லக்கினம்
அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே
No comments:
Post a Comment