Sunday, 26 May 2013

Guru peyarchi palangal 2013 - 2014 for all 12 moon signs குரு பெயர்ச்சி பலன் 2013 - 2014

நடப்பு விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள் (30.5.2013) சுப கிரகங்களில் முக்கியமானவரான தேவகுரு, ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார். 

இந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமைந்து. அனைவரும் பயன் பெற குரு தக்ஷின மூர்த்தியை வழிபடுவோம்.

ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

குரு நற்பலன் தரும் பாடல்
பெரு பதினொன்று ஐந்து ஏழு
பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ குரு
வரின் செல்வம் சீர் குதிரை
வெண்குடை தீவர்த்தி
தருமம் தானமும் உண்டு
தாய் தந்தை துணையுமுண்டு
அருமையும் பெருமையும் உண்டாம்
அரசர் பரிசும் பாராட்டும் உண்டாம்.
குரு துர்ப்பலனை தரும் பாடல்
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை
சிறை வைத்ததும்
தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும்
ஈசனார் ஒரு பத்திலே
தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்
சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தலை பூண்டதும்
வன்மை யற்றிட ராவணன் முடி
பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்
மன்னு மா குரு சாரி
மாமனை வாழ்விலா துறமென்பவே.


குரு பெயர்ச்சி பலன்கள் ராசியை வைத்து சொல்லுவது மிக பொதுவானது . அவர் அவர் சுய ஜாதககதில் குருவின் பலன் கொண்டும். தற்சமயம் அவருக்கு நடக்கும் தசா புத்தி கொண்டும்தான் கூற வேண்டும்.
பலன் ஜூன் 2013 to மே 2014.

மேஷ ராசி (குரு மூன்றில்)
1.திருமணம் கை கூடி வரும் நேரம்.
2.
கூட்டு தொழில் வெற்றிபெறும். 
3.
தந்தையின் உடல் நலம் சீராகும்.
4.
பண வரவு அதிகரிக்கும்.
5.
தைரியம் மேலோங்கும்.
6.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
7.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்.
8.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்.

ரிஷப ராசி (குரு இரண்டில் )
1.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
2.
வாக்கு சிறக்கும்.
3.
புதிய எதிரிகள் உருவாகலாம்.
4.
பழைய கடன் திருப்புவதும் புதிய கடன் பெறுவதுமாக இருக்கும்.
5.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
6.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.
7.
உத்தியோகம் உயரும்.

மிதுன ராசி (குரு ராசியில்)
1.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு.
2.
உடல் நலம் மேம்படும்.
3.
குழந்தைகளால் மகிழ்ச்சி.
4.
திருமணம் தாமதம் ஆனவர்களுக்கு இப்பொழுது அதற்கான முயற்சிகளில் வெற்றி.
5.
தந்தையின் உடல் நலம் மேம்படும்.
6.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்

கடக ராசி( குரு பன்னிரெண்டில்)
1.
விரயங்கள் அதிகரிக்கும்.
2.
தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
3.
வீடு/வாகனம் வாங்க அல்லது விஸ்தரிக்க எற்ற தருணம். 
4.
எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும்.
5.
வீடு, வாகனம் வாங்க அல்லது சுப செலவிற்காக கடன் வாங்கலாம்.
6.
உடல் ஆரோக்கியம் சிறக்கும்

சிம்ம ராசி (குரு பதினொன்றில்)
1.
மிகவும் லாபகரமான காலம்.
2.
பண வரவு அதிகரிக்கும்.
3..
தைரியம் மேலோங்கும்.
4.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
5.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்
6.
புத்திர பாக்கியம் ஏற்படும்.
7.
குழந்தைகளால் மகிழ்ச்சி.
8.
திருமணம் கை கூடி வரும் நேரம்.
9.
கூட்டு தொழில் வெற்றிபெறும்.

கன்னி ராசி (குரு பத்தில்) 
1.
பொருளாதார நெருக்கடி.
2.
உத்யோகத்தில் இடர்பாடுகள்.
3.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
4.
வாக்கு சிறக்கும்.
5.
தாயின் அதரவு கிடைக்கும்.
6.
கடன் சுமை அதிரிக்கும்.

துலா ராசி (குரு ஒன்பதில் )
1.
பாக்கியமான காலம் இது.
2.
உடல் நலம் மேம்படும்.
3..
தைரியம் மேலோங்கும்.
4.
பயணங்களால் லாபம் 
5.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்
6.
தடை பட்ட புத்திர பாக்கியம் தற்பொழுது கிட்ட வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி (குரு எட்டில் )
1.
குரு பலம் அற்ற காலம் இது.
2.
திருமண தடை தொடரலாம்.
3..
புத்திர பாக்கியம் தடை படலாம்.
4.
குடும்பத்தில் தாயின் உதவி கிடைக்கும்.
5.
விரயங்கள் அதிகரிக்கும்.
6.
குடும்பத்தை விட்டு தனித்து இருக்க நேரிடலாம்.

தனுசு ராசி (குரு எழில் )
1.
திருமண தடை நீங்கி திருமணம் கை கூடி வரும்
2.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து ஒற்றுமை மேலோங்கும் .
3.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
4.
தைரியம் மேலோங்கும்.
5.
அண்டை வீட்டாருடன் உறவு சுமுகமாக இருக்கும்.
6.
இளைய சகோதரம் உங்களால் நன்மை அடைவார்கள்.
7.
பண வரவு அதிகரிக்கும்.

மகர ராசி (குரு ஆறில் )
1.
எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும்.
2.
உடல் ஆரோக்கியம் சிறக்கும்
3.
வீடு, வாகனம் வாங்க அல்லது சுப செலவிற்காக கடன் வாங்கலாம்
4.
வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
5.
வாக்கு சிறக்கும்.
6.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.

கும்ப ராசி (குரு ஐந்தில்)
1.
புத்திர பாக்கியம் ஏற்படும்.
2.
குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம்.
3.
ஆயுள் / உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
4.
தந்தையின் உடல் நலம் சீராகும்.
5.
பூர்வீக சொத்துகளில் இருந்த தொல்லை நீகும்.
4.
பண வரவு அதிகரிக்கும்
5.
மிகவும் லாபகரமான காலம்.

மீன ராசி (குரு நான்கில் )
1.
வீடு/வாகனம் வாங்க அல்லது விஸ்தரிக்க எற்ற தருணம். 
2.
தாயின் அதரவு கிடைக்கும்.
3.
தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
4.
சுப விரயங்கள் அதிகரிக்கும்.
5.
பழைய கடன் திருப்புவதும் புதிய கடன் பெறுவதுமாக இருக்கும்.
6.
உடல் ஆரோக்கியம் சிறக்கும் 
7.
அரசாங்க வழியில் அனுகூலமான நிலை.

No comments:

Post a Comment