9 ம் வீட்டு அதிபதி ஸ்திர ராசி(ரிஷப,சிம்ம,விருச்சிக,கும் ப ) லக்கினத்தில் பிறந்த சாதகருக்கு பாதகாதிபதி என்பது புலிப்பாணி பாடலில் மூலம் தெளிவாக விளங்குகிறது. பாதகாதிபதி கேந்திரத்தில்(1,4,7,10) நின்றால், கெடு பலனும். திரிகோண ஸ்தானங்களில்(5,9) நின்றால், நற்பலன் என்று தெளிவாகிறது.
மேலும் அஷ்டமாதிபதிக்கும் (8ம் வீட்டு அதிபதி) இதே விதிதான்.
ரிஷப லக்கினம்
சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு
சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.
அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற
அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு
தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்
தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு
குள்ளப்பா குருமதியுங் கோணமேற
கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே
சிம்ம லக்கினம்
பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.
விருச்சிக லக்கினம்
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே
கும்ப லக்கினம்
பாடினேன் இன்னமொரு புதுமைகேளு
பாங்கான கும்பத்தி லுதித்த சேய்க்கு
ஆடினேன் அசுரர்குரு கோணமேற
அப்பனே உப்பரிகை மேடையுண்டு
தேடினேன் திரவியமும் சென்னல் பூமி
திடமாகச் சேருமடா செல்வமுள்ளோன்.
கூடினேன் கேந்திரமும் நட்புமே
கொற்றவனே துர்ப் பலனைக் கூறுவாயே
மேலும் அஷ்டமாதிபதிக்கும் (8ம் வீட்டு அதிபதி) இதே விதிதான்.
ரிஷப லக்கினம்
சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு
சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.
அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற
அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு
தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்
தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு
குள்ளப்பா குருமதியுங் கோணமேற
கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே
சிம்ம லக்கினம்
பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.
விருச்சிக லக்கினம்
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே
கும்ப லக்கினம்
பாடினேன் இன்னமொரு புதுமைகேளு
பாங்கான கும்பத்தி லுதித்த சேய்க்கு
ஆடினேன் அசுரர்குரு கோணமேற
அப்பனே உப்பரிகை மேடையுண்டு
தேடினேன் திரவியமும் சென்னல் பூமி
திடமாகச் சேருமடா செல்வமுள்ளோன்.
கூடினேன் கேந்திரமும் நட்புமே
கொற்றவனே துர்ப் பலனைக் கூறுவாயே
விருச்சிக லக்கின, பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் எப்போதும் தீமை தான் செய்யுமா ?? கடகத்தில் உச்ச குரு, கேது, ஆட்சி தேய்பிறை சந்திரன் இருக்கிறார்கள், அது 9வது இடம் பாதக ஸ்தானம் எனில் நன்மை செய்யுமா ?? தீமை செய்யுமா ??
ReplyDeleteபாதக ஸ்தான அதிபதியும் அதில் உள்ள கிரகமும அந்த இடத்திற்குத்தான் பாதகம். இங்கே குரு இரண்டுக்கும் ஐந்துக்கும் அதிபதிகலாகி உச்சம் பெறுவது நன்மையே. ேதுவிற்கு ஆட்சி வீடு கிடையாது , சில நூல்களில் மட்டுமே கடகம் என எழுதப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு சந்திரன் ஆட்சி பெறுவது தவறு.
ReplyDelete